search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா போட்டியில் டோனியின் மேஜிக் ஸ்டெம்பிங்: அதிர்ந்து போன மேக்ஸ்வெல்
    X

    கொல்கத்தா போட்டியில் டோனியின் மேஜிக் ஸ்டெம்பிங்: அதிர்ந்து போன மேக்ஸ்வெல்

    அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லை அதிரடியாக ஸ்டெம்பிங் செய்த டோனியின் திறமையை கண்டு ஆஸி. ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் கார்ட்ரைட் ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்.

    ட்ராவிஸ் ஹெட் 39 ரன்னில் ஆட்டம் இழந்ததும், மேக்ஸ்வெல் களம் இறங்கினார். அப்போது ஆஸ்திரேலியா 16 ஓவரில் 85 ரன்கள் எடுத்திருந்தது.

    மேக்ஸ்வெல் களம் இறங்கியதும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 23-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை மேக்ஸ்வெல் முன்னால் வந்து தடுத்தாடினார்.



    அப்போது பந்து காலில் பட்டு மெதுவாக விக்கெட் கீப்பர் டோனியின் கைக்கு சென்றது. பந்து மெதுவாகத்தான் செல்கிறது என்று நினைத்த மேக்ஸ்வெல் நிதானமாக பின்னோக்கி வந்தார். அதற்குள் மேஜிக் நிகழ்த்துவது போல் பந்தை பிடித்து மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார் டோனி.

    டோனியின் அதிவேக ஸ்டெம்பிங்கை சற்றும் எதிர்பாராத மேக்ஸ்வெல் கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறினார். அவர் 2 சிக்ஸ் உடன் 18 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.

    ஸ்டெம்பிங்கில் ‘கிங்’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் டோனி.
    Next Story
    ×