search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடருக்காக இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகல்
    X

    ஆஷஸ் தொடருக்காக இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகல்

    இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலக உள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம்பிடித்துள்ளார்.

    இவர் சமீப காலமாக ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர், ஆஸ்திரேலிய அணி முக்கியமான தொடரான ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது.



    இதனால் இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலக பேட் கம்மின்ஸ் முடிவு செய்துள்ளது. சொந்த நாடு திரும்பியதும் ஷெபீல்டு ஷீல்டு தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 7-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி முடிவடைகிறது.

    பேட் கம்மின்ஸ்க்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×