search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
    X

    17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

    இந்தியாவில் நடைபெறவிருக்கும் 17 வயதிற்குட்பட்டவர்களுக்காக உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 21 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    17 வயதிற்குட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் கொல்கத்தா, கொச்சி, புதுடெல்லி, நவி மும்பை, கவுகாத்தி, மர்கோவா ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.

    இந்த போட்டிகளில் விளையாட இந்தியா, ஈரான், அமெரிக்கா உட்பட 24 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா மற்றும் கானா அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. தொடரின் முதல் நாளான அக்டோபர் 6-ம் தேதி இரண்டாவது போட்டியாக இது நடைபெறுகிறது. இதுதவிர, கொலம்பியா அணியுடன் 9-ம் தேதியும், கானா அணியுடன் 12-ம் தேதியும் இந்திய அணி விளையாட உள்ளது.

    நாக்-அவுட் சுற்று போட்டிகள் அக்டோபர் 21 மற்றும் 22-ம் தேதிகளிலும், அரையிறுதி போட்டிகள் 25 தேதியும் நடைபெற உள்ளன. இறுதி போட்டி அக்டோபர் 28-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    அணிகள் விவரம்:-

    குரூப் ஏ: இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா
    குரூப் பி: பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி
    குரூப் சி: ஈரான், குனியா, ஜெர்மெனி, கோஸ்டா ரிக்கா
    குரூப் டி: வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின்
    குரூப் ஈ: ஹோண்டுராஸ், ஜப்பான், நியூ கலிடோனியா, பிரான்ஸ்
    குரூப் எஃப்: ஈராக், மெக்ஸிகோ, சிலி, இங்கிலாந்து

    இந்நிலையில் 21 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

    கோல்கீப்பர்கள்: தீரஜ் சிங், பிரப்சுகன் கில், சன்னி தாலிவால்

    தடுப்பாட்டம்: போரிஸ் சிங், ஜிதேந்திர சிங், அன்வர் அலி, சஞ்சீவ் ஸ்டாலின், ஹென்றி அண்டனே, நமித் தேஷ்பாண்டே

    நடுக்களம்: சுரேஷ் சிங், நிந்தோன்கன்பா மீதேய், அமர்ஜித் சிங் கியாம், அபிஜித் சர்கார், கோமல் தாடல், லலேங்மாவியா, ஜேக்சன் சிங், நோங்டம்பா நயோரம், ராகுல் கன்னோலி பிரவீன், ஷாஜகான்

    முன்களம்: ரஹிம் அலி, அங்கித் ஜாதவ்

    ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மாடோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×