search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா ஒருநாள் கிரிக்கெட்: குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை
    X

    கொல்கத்தா ஒருநாள் கிரிக்கெட்: குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ‘சைனமேன்’ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா சரியாக 50 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

    இந்தியாவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்கள் குவிக்க திணறினார்கள். ஸ்மித் மட்டும் நிலைத்து நின்றி விளையாடினார். அவரை 59 ரன்னில் வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா.

    அதன்பின் ஆஸ்திரேலியா விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. 33-வது குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சந்தித்த வடே 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்த பந்தில் அகர் 1 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார்.



    4-வது பந்தை கம்மின்ஸ் சந்தித்தார். இந்த பந்தில் விக்கெட் வீழ்த்தினால் ஹாட்ரிக் சாதனைப் படைக்கலாம் என்ற நோக்கத்தில் வீசினார். பந்து கம்மின்ஸ் பேட்டை உரசி விக்கெட் கீப்பர் டோனியிடம் தஞ்சம் அடைந்தது.

    இதனால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார். இந்தியா சார்பில் கொல்கத்தா மைதானத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் 3-வது வீரர் இவராவார். இதற்கு முன் கபில்தேவ், சேத்தன் சர்மா ஆகியோர் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
    Next Story
    ×