search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்க மண்ணில் 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது
    X

    தென்ஆப்பிரிக்க மண்ணில் 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது

    தென்ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் அடுத்த வருடம் 5-ந்தேதி தொடங்குகிறது.
    இந்திய அணி அடுத்த வருடம் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாட இருக்கிறது. மூன்று வகை கிரிக்கெட் தொடர்களையும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்றும், முதல் டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் டிசம்பர் 26-ந்தேதி டெஸ்டில் விளையாட வேண்டும் என்றும் தென்ஆப்பிரிக்கா விரும்பியது.

    ஆனால் இலங்கைக்கு எதிரான தொடர் டிசம்பர் 24-ந்தேதிதான் முடிவடைகிறது. இதனால் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் பங்கேற்க இயலாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியது.



    மேலும் நான்கு டெஸ்ட் என்பதை மூன்றாக குறைத்துக் கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கியது. அதன்படி மூன்று போ்டடிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் ஒப்புக் கொண்டன.

    அதன்படி டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. இந்திய அணி டிசம்பர் 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா சென்றடைகிறது. 30 மற்றும் 31-ந்தேதி நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.
    Next Story
    ×