search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் ஓபன் டென்னிஸ்: முகுருசா, பிலிஸ்கோவா காலிறுதிக்கு தகுதி
    X

    ஜப்பான் ஓபன் டென்னிஸ்: முகுருசா, பிலிஸ்கோவா காலிறுதிக்கு தகுதி

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முகுருசா, பிலிஸ்கோவா, கெர்பர் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகள் அந்நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. 

    இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் முகுருசா, போர்டோ ரிகோவின் மோனிகா பீயூங்கை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய முகுருசா, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.

    இதே சுற்றில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், 2-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, போலந்தின் மக்தா லின்னெட்டுடன் மோதினார். இப்போட்டியில், பிலிஸ்கோவா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு போட்டியில் ஏழாம் நிலையில் இருக்கும் ஜெர்மெனியின் ஏஞ்சலிக் கெர்பர் - ரஷியாவின் தாரியா கசட்கினா ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். முதல் சுற்றில் இரு வீராங்கனைகளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இருப்பினும் கெர்பர் 7-6 என முதல் சுற்றை கைப்பற்றினார். அதன்பின் நடந்த இரண்டாம் சுற்றில் கெர்பர் சிறப்பாக விளையாடி 6-3 என்ற செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இவர் நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் பிலிஸ்கோவாவை சந்திக்கிறார்.
    Next Story
    ×