search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓஸ்மான் டெம்ப்ளேவிற்கு ஆபரேசன்: மூன்றரை மாதம் ஓய்வு- பார்சிலோனாவிற்கு பின்னடைவு
    X

    ஓஸ்மான் டெம்ப்ளேவிற்கு ஆபரேசன்: மூன்றரை மாதம் ஓய்வு- பார்சிலோனாவிற்கு பின்னடைவு

    பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான டெம்ப்ளேவிற்கு ஆபரேசன் நடைபெற்றுள்ளதால் மூன்றரை மாதம் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு சென்றதால், பார்சிலோனா டோர்ட்மண்ட் அணியின் டெம்ப்ளே-வை அதிக தொகை கொடுத்து வாங்கியது.

    மெஸ்சி, சுவாரஸ் ஆகியோருடன் இணைந்து டெம்ப்ளே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த மூவரின் ஆட்டத்தால் லா லிகா தொடரில் பார்சிலோனா தோல்வியை சந்திக்காமல் செல்கிறது.



    கடந்த சனிக்கிழமை பார்சிலோனா அணி, கேடேஃப் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 23-வது நிமிடத்தில் டெம்ப்ளேவின் இடது காலின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.



    இந்த காயம் குணமடைய டெம்ப்ளே ஆபரேசன் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி இன்று அவருக்கு சிறப்பான முறையில் ஆபரேசன் நடைபெற்றுள்ளது. இதனால் டெம்ப்ளே சுமார் மூன்றரை மாதம் ஓய்வில் இருப்பார் என பார்சிலோனா அணி தெரிவித்துள்ளது.

    டெம்ப்ளே அணியில் இடம்பெறாதது பார்சிலோனாவிற்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×