search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியின் சமீப கால மாற்றத்திற்கு விராட் கோலிதான் காரணம்: சவுரவ் கங்குலி
    X

    டோனியின் சமீப கால மாற்றத்திற்கு விராட் கோலிதான் காரணம்: சவுரவ் கங்குலி

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, டோனி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அவரை விருப்பம்போல் விளையாட சுதந்திரம் கொடுக்கிறார் என கங்குலி கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் விக்கெட்டுக்கள் சரிந்த நிலையில் டோனி சிறப்பாக விளையாடி சரிவில் இருந்து இந்தியாவை மீட்டார். அவர் 79 ரன்கள் சேர்த்ததன் மூலம் இந்தியா 281 ரன்கள் சேர்த்தது.

    36 வயதாகும் டோனி ஒருநாள் போட்டியில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்த வருடத்தில் டோனி 19 போட்டியில் 627 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 89.57 ஆகும்.

    டோனியின் இந்த மாற்றத்திற்கு விராட் கோலிதான் காரணம் என்று கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘வீரர்கள் நீண்ட காலம் விளையாடும்போது (டோனி இந்தியாவிற்காக 300-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்) அவர்களுக்கு எப்படி ரன்கள் குவிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும்.



    9 ஆயிரம் ரன்களுக்கு மேல் டோனி குவித்துள்ளார். தனது ஓய்வு காலத்திற்குள் இன்னும் ரன்கள் குவிப்பார்.

    டோனி ரன்கள் குவிப்பதற்கு கேப்டனின் உறுதிதான் காரணம். இதற்காக விராட் கோலிக்கு நன்றி கூறவேண்டும். ஏனெனில், டோனி மீது விராட் கோலி அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளார். டோனி எப்படி விளையாட விரும்புகிறாரோ? அந்த வழியில் விளையாட அவருக்கு சுதந்திரம் அளித்துள்ளார்.



    வீரர்கள் உருவாவதும், அவர்கள் உடைந்து போவதும், நீங்கள் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பொறுத்தது. டோனி இன்று என்ன செய்கிறாரோ, அதற்கு முழுக்காரணம் விராட் கோலிதான்’’ என்றார்.
    Next Story
    ×