search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை பயிற்சியாளருக்கு நான் ரெடி: முன்னாள் புயல் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட்
    X

    தலைமை பயிற்சியாளருக்கு நான் ரெடி: முன்னாள் புயல் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட்

    மும்பை இந்தியன்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஷேன் பாண்ட், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தயார் என்று கூறியுள்ளார்.
    நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட். 42 வயதாகும் இவர், கடந்த 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தனது அபார பந்து வீச்சால் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். துரதிருஷ்டவசமாக முதுகு வலி காயம் காரணமாக அணியில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் போனது. 2010-ம் ஆண்டு வரை நியூசிலாந்து அணிக்காக விளையாடினாலும், 18 டெஸ்ட், 82 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். துணை பயிற்சியாளர் பதவி வரை வகித்துள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்து ‘ஏ’ அணி இந்தியா வந்து இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு ஷேன் பாண்ட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணை பயிற்சியாளர் பதவி அனுபவத்தின் மூலம் தன்னால் தலைமை பயிற்சியாளராக செயல்பட முடியும் என்று ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில் ‘‘தற்போதைய இந்த நேரத்தில் நான் தலைமை பயிற்சியாளர் பதவி ஏற்பதற்கு தயாராக இருக்கிறேன். 7 வருடங்கள் துணை பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளது.

    நான் நியூசிலாந்து, மும்பை இந்தியன்ஸ், பிக் பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகளுக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளேன். நான் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியை விரும்புகிறேன். என்னுடைய சொந்த முன்னேற்றத்திற்கு மாறுபட்ட கோணத்தில் தலைமை பயிற்சியாளர் பதவி உதவிகரமாக இருக்கும். புதிய சவாலான இது, எனக்கு சிறந்ததாக அமையும்’’ என்றார்.
    Next Story
    ×