search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2017-ல் 32 சிக்சர்கள் விளாசி ஹர்திக் பாண்டியா அசத்தல்
    X

    2017-ல் 32 சிக்சர்கள் விளாசி ஹர்திக் பாண்டியா அசத்தல்

    இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியா 2017-ம் ஆண்டில் இதுவரை 32 சிக்சர்கள் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 11 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. கேதர் ஜாதவ் 40 ரன்னும், ரோகித் சர்மா 28 ரன்களும் எடுக்க, 21.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு டோனியுடன் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். முதலில் நிதானமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அதன்பின் அதிரடியாக விளையாடினார்.



    66 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 83 ரன்கள் குவித்தார். இவரும் டோனியும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தனர்.

    ஹர்திக் பாண்டியா களம் இறங்கினாலே சிக்சரை எதிர்பார்க்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் 32 சிக்சர்கள் விளாசி இந்திய பேட்ஸ்மேன்களில் முதல் வீரராக உள்ளார்.



    நேற்றைய போட்டியில் ஐந்து சிக்சர்கள் விளாசிய ஹர்திக் பாண்டியா, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 6 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×