search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, முதல் மந்திரிகள் வாழ்த்து
    X

    சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, முதல் மந்திரிகள் வாழ்த்து

    கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதல் மந்திரிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி,

    கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை
    நோஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். இறுதியில், 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் நோஜோமி ஒகுஹராவை  பி.வி.சிந்து வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடி பதிவிடுகையில், கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துக்கு வாழ்த்துக்கள். வளர்ந்து வரும் வீராங்கனை சிந்துவின் சாதனையை கண்டு நாடு பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
     
    இதேபோல், தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, விளையாட்டு துறை மற்றும் நடிகர் அமிதாப்பச்ச்சன் உள்ளிட்ட சினிமா துறையினர் உள்பட பலரும் டுவிட்டரில்
    பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×