search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் போட்டியில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் ஜே.பி. டுமினி ஓய்வு
    X

    டெஸ்ட் போட்டியில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் ஜே.பி. டுமினி ஓய்வு

    தென்ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டரான இடது கை பேட்ஸ்மேன் டுமினி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவின் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர் ஜேபி டுமினி. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். இங்கிலாந்து தொடரின்போது டுமினியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.



    2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இங்கிலாந்து தொடர் வரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டுமினி 6 சதங்கள் அடித்துள்ளார். 42 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். தற்போது டுமினி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அத்துடன முதல்தர போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இனி, 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார் டுமினி.
    Next Story
    ×