search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையுடன் செரீனா வில்லியம்ஸ்: சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவும் புகைப்படம்
    X

    குழந்தையுடன் செரீனா வில்லியம்ஸ்: சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவும் புகைப்படம்

    டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸ் தனது பெண் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை முதன்முதலாக சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
    அமெரிக்கா:

    அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸிற்கு கடந்த 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை உடனான படத்தை செரீனா சமூக ஊடகங்களில் முதன்முதலாக வெளியிட்டுள்ளார். மேலும் 2 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.



    அந்த வீடியோவில் தனது கர்ப்பக் காலத்தின்போது எடுத்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அவர் தனது குழந்தையை ஜூனியர் அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த 2015-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடுவதற்காக இத்தாலி நாட்டுக்கு சென்றபோது ரெடிட் சமூக வலைதளத்தின் இணை இயக்குனர் அலெக்சிஸ் ஓஹானியன் என்பவரை செரினா வில்லியம்ஸ் ரோம் நகரில் சந்தித்தார். அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர். அவர்களுக்கு பிறந்த குழந்தை என்பதால் ஜூனியர் அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் என தனது காதலர் பெயரை குறிப்பிட்டிருந்தார்.



    இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×