search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வெல்லும்: கங்குலி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வெல்லும்: கங்குலி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உள்ளூரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் இலங்கைக்கு எதிராக செய்தது போன்று 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்வதற்குரிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் ஆஸ்திரேலியா வலுவான அணி. நமது தேர்வாளர்கள் இளம் வீரர்களின் திறமையை பரிசோதிக்க விரும்புகிறார்கள்.

    2019-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வாளர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. உலக கோப்பைக்கு தயாராவதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. அணியை வலுப்படுத்த ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுப்பது அவசியமாகும்.’ என்றார்.
    Next Story
    ×