search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்த லட்சுமண் கருத்துக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்த லட்சுமண் கருத்துக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து லட்சுமண் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டியளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி ஆஸ்திரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது. இந்த தொடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும்’ என்று தனது கணிப்பை வெளியிட்டார்.

    மேலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். கோலியே, தற்போதைய கட்டத்தில் சுமித்தை விட சிறந்த கேப்டன் ஆவார் என்றார்.

    இந்நிலையில் லட்சுமணனின் கருத்திற்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பதிலடி அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசுகையில், கோலி மற்றும் ஸ்மித் இருவரில் யார் அதிக ரன்கள் குவிப்பார்கள் என்பது ஒரு பிரச்சினையே அல்ல. இறுதியில் யார் அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய கேப்டனாக இருக்கிறார் என்பதே முக்கியமாகும் என்றார்.

    மேலும், இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றும் என கிளார்க் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×