search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாக். மண்ணில் சர்வதேச கிரிக்கெட்: உலக லெவன் அணிக்கெதிராக பாகிஸ்தான் 197 ரன்கள் குவிப்பு
    X

    பாக். மண்ணில் சர்வதேச கிரிக்கெட்: உலக லெவன் அணிக்கெதிராக பாகிஸ்தான் 197 ரன்கள் குவிப்பு

    பாகிஸ்தானில் நடைபெற்று வரும் உலக லெவன் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது.
    பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளிசிஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய பகர் சமான் 4-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 33 பந்தில் அரைசதம் அடித்தார். 11.2 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைத் தொட்டது.


    பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆன பஹீம் அஷ்ரப்

    அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது ஷேசாத் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார். பாபர் ஆசம் 86 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

    சோயிப் மாலிக் 20 பந்தில் 38 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, இமாத் வாசிம் கடைசி 3 பந்தில் 14 ரன்கள் விளாச பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது. பெரேரா கடைசி ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். பாகிஸ்தான் கடைசி 3 ஓவரில் 48 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×