search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெனால்டி சர்ச்சை: செனகல் போட்டியை திரும்ப நடத்த தென்ஆப்பிரிக்கா சம்மதம்
    X

    பெனால்டி சர்ச்சை: செனகல் போட்டியை திரும்ப நடத்த தென்ஆப்பிரிக்கா சம்மதம்

    செனகலுக்கு எதிரான போட்டியில் 2-1 என தென்ஆப்பிரிக்கா பெற்ற வெற்றிக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டதால் போட்டியை திரும்ப நடத்த முடிவு செய்துள்ளது.
    ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் அணியைத் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு முன்னேற வேண்டும்.

    அதன்படி ஆப்பிரிக்க கண்டத்திற்கான தகுதிச் சுற்று போட்டி ஒன்றில் தென்ஆப்பிரிக்கா - செனகல் அணிகள் மோதின. முதல் பாதி நேரத்தின்போது செனகல் வீரரின் கையில் பந்து பட்டதாக தென்ஆப்பிரிக்கா அணியினருக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை பயன்படுத்தி தென்ஆப்பிரிக்கா கோல் அடித்து 2-1 என வெற்றி பெற்றது. இதற்கு செனகல் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் நடுவர் மீதும் கடுமையாக குற்றம்சாட்டியது.



    இதுகுறித்து பிஃபாவிடம் முறையீடு செய்யப்பட்டது. பிஃபா நடத்திய விசாரணையில் நடுவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதனால் நடுவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

    அத்துடன் அந்த போட்டியை மீண்டும் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தென்ஆப்பிரிக்க கால்பந்து பெடரேசன் ஏற்றுக் கொண்டது. இதுகுறித்து தென்ஆப்பிரிக்க கால்பந்து பெடரேசன் கூறுகையில் ‘‘இந்த போட்டியில் மோசடி நடந்திருந்தால் நாங்கள் கட்டாயம் மீண்டும் போட்டியை நடத்துவோம்’’ என்று தெரிவித்துள்ளது.

    செனகலுக்கு எதிராக வெற்றி பெற்றால் தென்ஆப்பிரிக்க அணி, உலகக்கோப்பையில் விளையாட சிறிய அளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×