search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி அணிக்கு டுபெலிசிஸ் கேப்டனாக தேர்வு
    X

    தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி அணிக்கு டுபெலிசிஸ் கேப்டனாக தேர்வு

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக டுபெலிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து நிலைக்கும் டுபெலிசிஸ் கேப்டனாக உள்ளார்.
    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து டிவில்லியர்ஸ் கடந்த மாதம் விலகினார். அவருக்கு பதிலாக டுபெலிசிஸ் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கருதப்பட்டது.

    அனைவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி கேப்டனாக டுபெலிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு குழுவின் இந்த பரிந்துரையை ஏற்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து நிலைக்கும் டுபெலிசிஸ் கேப்டனாக உள்ளார். அவர் ஏற்கனவே டெஸ்ட், 20 ஓவர் போட்டியில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

    டுபெலிசிஸ் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரதின கோப்பையில் விளையாடும் உலக லெவன் அணிக்கும் கேப்டனாக உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. டுபெலிசிஸ் ஏற்கனவே 9 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக பணியாற்றி இருக்கிறார். டிவில்லியர்ஸ் காயம் அடைந்ததால் இந்த பொறுப்பை ஏற்று இருந்தார்.

    டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கான கேப்டன்களில் ஒருவராவார். அவர் தலைமையில் 103 போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆடியுள்ளது. இதில் 59 போட்டியில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×