search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு 6 மாதம் ஓய்வு கொடுத்தார் ஷாகிப் அல் ஹசன்
    X

    டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு 6 மாதம் ஓய்வு கொடுத்தார் ஷாகிப் அல் ஹசன்

    வங்காள தேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் 6 மாத காலம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார்.
    வங்காள தேச அணியின் முன்னணி வீரர் ஷாகிப் அல் ஹசன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் இவர், டெஸ்ட் போட்டிக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

    இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் லீக் என அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளது எனக் கருதுகிறார்.




    இதனால் 6 மாத காலம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்தார். இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியத்திற்கு ஷாகிப் அல் ஹசன் கடிதம் எழுதினார்.

    கடிதம் அனுப்பியதை ஒப்புக்கொண்ட வங்காள தேச கிரிக்கெட் வாரியம், 6 மாதம் ஷாகிப் அல் ஹசனுக்கு அனுமதி வழங்கியுள்ளது.



    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஷாகிப் அல் ஹசன் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×