search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: புனே அணி 6-வது வெற்றி
    X

    புரோ கபடி லீக்: புனே அணி 6-வது வெற்றி

    புரோ கபடி லீக் போட்டியின் 65-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.
    கொல்கத்தா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 42-37 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பதிவு செய்தது. பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 31-31 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.

    இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), குஜராத்-உத்தரபிரதேச யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 
    Next Story
    ×