search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரை இறுதிக்கு தகுதி - பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரை இறுதிக்கு தகுதி - பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அரை இறுதிக்கு ரபெல் நடால் முன்னேறி இருக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் பிளிஸ்கோவா அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூபுளுவை எதிர்கொண்டார்.

    இதில் ரபெல் நடால் 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 36 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    31 வயதான நடால் அமெரிக்க ஓபன் அரை இறுதிக்கு 6-வது முறையாக முன்னேறி இருக்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான பிளிஸ்கோவா (செக்குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.



    20-வது வரிசையில் இருக்கும் கோகோ வான்ட் வெக் (அமெரிக்கா) 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல்முறையாக அமெரிக்க ஒபன் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். வான்ட்வெக் அரை இறுதியில் மேடிசன் கெய்சை (அமெரிக்கா) சந்திக்கிறார்.

    15-ம் நிலை வீராங்கனையான மேடிசன் கெய்ஸ் கால்இறுதியில் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் கனேபியை (எஸ்டோனியா) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ், ஸ்டெப் ஹென்ஸ் அரை இறுதியில் நுழைந்து இருந்தனர். இதன்மூலம் 4 அமெரிக்க வீராங்கனைகளும் அரை இறுதியில் நுழைந்து சாதனை படைத்து உள்ளனர்.
    Next Story
    ×