search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.வி. ஒளிபரப்பு உரிமத்துக்கு பெரிய தொகை: கூடுதல் வருவாய் கிடைக்க இருப்பதால் ஐ.பி.எல். அணிகள் உற்சாகம்
    X

    டி.வி. ஒளிபரப்பு உரிமத்துக்கு பெரிய தொகை: கூடுதல் வருவாய் கிடைக்க இருப்பதால் ஐ.பி.எல். அணிகள் உற்சாகம்

    டி.வி. ஒளிபரப்பு உரிமத்துக்கு மெகா தொகை கிடைத்திருப்பதால் ஐ.பி.எல்.-ல் பங்கேற்கும் 8 அணிகளின் நிர்வாகங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளன.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அடுத்த 5 ஆண்டுகள் டி.வி.யில். நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை ஸ்டார் இந்தியா குழுமம் ரூ.16,347 கோடிக்கு பெற்றுள்ளது. இதே போல் ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ ரூ.2,199 கோடிக்கு வாங்கியுள்ளது.

    ஒளிபரப்பு உரிமம் மூலம் மெகா தொகை கிடைத்திருப்பதால் ஐ.பி.எல்.-ல் பங்கேற்கும் 8 அணிகளின் நிர்வாகங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளன. மத்திய வருவாய் பகிர்வு ஒப்பந்தப்படி 50 சதவீத தொகையை அணி நிர்வாகங்களுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் பிரித்து கொடுக்க வேண்டும். இதன்படி பார்த்தால் ஸ்டார் இந்தியா மற்றும் விவோவிடம் இருந்து ஒவ்வொரு ஆண்டுக்கும் ஏறக்குறைய ரூ.3,500 கோடி ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு கிடைக்கும். அதில் 50 சதவீதம் அதாவது ரூ.1,750 கோடியை பகிர்ந்து வழங்கும் போது, ஆண்டுக்கு ஒவ்வொரு அணிக்கும் ரூ.220 கோடி வரை வருவாயாக கிடைக்கும். முந்தைய சீசனுடன் ஒப்பிடும்போது இந்த தொகை இரண்டு மடங்கு அதிகமாகும்.

    அதே நேரத்தில் தங்களுக்கு கிடைக்கும் வருவாயில் 20 சதவீதத்தை ஐ.பி.எல். போட்டியின் தலைமை அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அணி நிர்வாகங்கள் வழங்க வேண்டும். இந்த வகையில், ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களுக்கு கிடைக்கும் தொகையில் இருந்து ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கொடுக்க வேண்டி இருக்கும்.
    Next Story
    ×