search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: டெல்லி, மும்பை வெற்றி
    X

    புரோ கபடி லீக்: டெல்லி, மும்பை வெற்றி

    12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் தொடரின் 63வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி, மும்பை அணிகள் வெற்றி பெற்றன.
    கொல்கத்தா:

    12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 38-30 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 6-வது வெற்றியாகும்.

    இன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- புனேரி பால்டன் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 
    Next Story
    ×