search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு
    X

    இந்தியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

    இந்தியாவிற்கு எதிராக நாளை நடைபெற இருக்கும் டி20 போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்று விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.

    இந்நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இதற்கான 15 கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லெக் ஸ்பின்னர் வாண்டர்சே, வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தசுன் ஷனாகா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. உபுல் தரங்கா (கேப்டன்), 2. மேத்யூஸ், 3. நிரோஷன் டிக்வெல்லா, 4. தில்ஷன் மனவீரா, 5. தசுன் ஷனாகா, 6. மிலிந்த ஸ்ரீவர்தனா, 7. வனிந்து ஹசரங்கா, 8. அகிலா தனஞ்ஜெயா, 9. ஜெஃப்ரே வாண்டர்சே, 10. இசுரு உதானா, 11. சீக்குகே பிரசன்னா, 12. திசாரா பெரேரா, 13. மலிங்கா, 14. சுரங்கா லக்மல், 15. விகும் சஞ்ஜெயா.
    Next Story
    ×