search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ் தலைவாஸ்?: பெங்காலுடன் இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ் தலைவாஸ்?: பெங்காலுடன் இன்று மோதல்

    கொல்கத்தாவில் நடக்கும் 60-வது லீக் ஆட்டத்தில் சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா:

    5-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று இரவு 9 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் 60-வது லீக் ஆட்டத்தில் சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் 8 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 5 தோல்வி, 2 டையுடன் 15 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

    பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. தெலுங்கு டைட்டான்ஸிடம் 3 முறையும் பெங்களூர் புல்ஸ், டெல்லி தபாங், பாட்னா பைரட்ஸ் ஆகிய அணிகளிடம் தோற்றது. உ.பி யோத்தா, அரியானா அணிகளுடன் ‘டை’ ஆனது.

    தமிழ் தலைவாஸ் அணி கடைசி 2 ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. பெங்கால் வாரியர்ஸ் 10 ஆட்டத்தில், 5 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 35 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

    பலம்வாய்ந்த பெங்காலை வீழ்த்த தமிழ் தலைவாஸ் கடுமையாக போராட வேண் டியது இருக்கும். முன்னதாக இரவு 8 மணிக்கு நடக்கும் ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத்-ஜெய்ப்பூர் மோதுகின்றன. குஜராத் அணி 8- வது வெற்றிக்காக காத்திருக்கிறது. ஜெய்ப்பூர் 5-வது வெற்றிக்காக போராடும்.

    Next Story
    ×