search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், பில்ஸ்கோவா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், பில்ஸ்கோவா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பெடரர், பில்ஸ்கோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    வாஷிங்டன்: 

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், டோம்னிக் தெயிம் ஆகியோர் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் மூன்றாம்நிலை வீரரான ரோஜர் பெடரர், ரசியாவின் மிக்கேல் யூஷ்னியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெடரர், 6-1, 6-7, 4-6, 6-4, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆறாம்நிலை வீரரான டோம்னிக் தெயிம், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை 6-4, 6-4, 4-6, 7-5 என்ற செட்கணக்கில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    இதுதவிர மோன்பில்ஸ், கோஃபின் ஆகியோரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாம் சுற்று போட்டியில் முதல்நிலை வீராங்கனையான பில்ஸ்கோவா, அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸை 2-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் விழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியன்ஸும், பிரான்ஸின் டோடினும் பலப்பரிட்சை செய்தனர். இப்போட்டியில், 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

    Next Story
    ×