search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு தமிழ் தலைவாஸ் பதிலடி கொடுக்குமா?: இன்று பலப்பரீட்சை
    X

    தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு தமிழ் தலைவாஸ் பதிலடி கொடுக்குமா?: இன்று பலப்பரீட்சை

    தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு தமிழ் தலைவாஸ் அணி இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    5-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியின் 5-வது கட்ட போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக பங்கேற்றுள்ளது. அந்த அணி இதுவரை 7 ஆட்டத்தில் விளையாடி 1 வெற்றி, 4 தோல்வி, 2 டையுடன் 14 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் கடைசி இடத்தில் இருக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் புல்சை மட்டும் வீழ்த்தி இருந்தது. தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூர் புல்ஸ், தபாங்டெல்லி, பாட்னா பைரேட்ஸ் ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோதா அணிகளிடம் ‘டை’ செய்தது.

    தமிழ் தலைவாஸ் அணி 8-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை இன்று மீண்டும் சந்திக்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் 27-32 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதற்கு தமிழ் தலைவாஸ் அணி இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கு டைட்டன்ஸ் அணி 11 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 8 தோல்வி, ஒரு டையுடன் 18 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை-ஜெய்ப்பூர் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 24 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியனான அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஜெய்ப்பூர் அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 22 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. முன்னாள் சாம்பியனான மும்பை அணியுடன் 5-வது வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.
    Next Story
    ×