search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கிப்சன்.
    X
    தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கிப்சன்.

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கிப்சன் நியமனம்

    தென்ஆப்பிரிக்க அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஒட்டிஸ் கிப்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    கேப்டவுன் :

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரஸ்செல் டோமின்கோவின் பதவி காலம் அடுத்த மாதம் (செப்டம்பர்) முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஒட்டிஸ் கிப்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. 48 வயதான ஒட்டிஸ் கிப்சன் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். வெஸ்ட்இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து இருக்கும் ஒட்டிஸ் கிப்சன் தற்போது இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

    செப்டம்பர் மாதம் நடைபெறும் வங்காளதேசத்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக ஒட்டிஸ் கிப்சன் இணைய இருக்கிறார். ‘தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக பணியாற்ற இருப்பதை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்று கிப்சன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×