search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ரொனால்டோ
    X

    ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ரொனால்டோ

    ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர் விருதை 3-வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.
    ஐரோப்பிய கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளில் விளையாடுவதில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்து அவருக்கு சிறந்த வீரர் விருது வழங்கப்படும்.

    2016-17-ம் ஆண்டுக்கான விருது போட்டியில் ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் ரொனால்டோ (போர்ச்சுக்கல்), பார்சிலோனாவின் மெஸ்சி (அர்ஜென்டினா), யுவான்டஸ் அணியின் கோல்கீப்பர் பஃப்போன் இடையே கடும் போட்டி நிலவியது.



    நேற்று இரவு சிறந்த வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதில் ரொனால்டோ சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். ரொனால்டா 3-வது முறையாக இந்த விருதை வென்றுள்ளார். ஏற்கனவே அவர் 2013, 2015 ஆண்டு விருதை வென்று இருந்தார். சிறந்த வீராங்கனைக்கான விருது நெதர்லாந்தின் மார் டென்சுக்கு வழங்கப்பட்டது.

    சிறந்த நடுகள வீரர் என்ற விருதை லூகா மோட்ரிக்கும், சிறந்த பின்கள வீரருக்கான விருதை ரியல் மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸும், சிறந்த கோல் கீப்பருக்கான விருதை பஃப்போனும் பெற்றனர்.
    Next Story
    ×