search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி ‘லீக்’: தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி. அணிகள் இன்று மோதல்
    X

    புரோ கபடி ‘லீக்’: தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி. அணிகள் இன்று மோதல்

    புரோ கபடி லீக் போட்டியின் 4-வது லீக் ஆட்டம் லக்னோவில் இன்று நடக்கிறது. இதில் உ.பி. யோத்தா- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    லக்னோ:

    5-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் ஐதராபாத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. 4-வது கட்ட போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி நேற்று நடந்த 6-வது ‘லீக்‘ ஆட்டத்தில் உ.பி. யோத்தா அணியை எதிர் கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டம் 33-33 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி பெற்ற 2-வது ‘டை’யாகும். தமிழ் தலைவாஸ் 6 ஆட்டத்தில் விளையாடி 1 வெற்றி, 3 தோல்வி, இரண்டு ‘டை’யுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.

    புரோ கபடி லீக் போட்டியின் 4-வது லீக் ஆட்டம் லக்னோவில் இன்று நடக்கிறது. இதில் உ.பி. யோத்தா- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    உ.பி. அணி 3 வெற்றி, 5 தோல்வி, 2 ‘டை’யுடன் 25 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி 4-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    தெலுங்கு டைட்டன்ஸ் 2 வெற்றி, 7 தோல்வி, 1 ‘டை’யுடன் 17 புள்ளிகள் பெற்று அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
    Next Story
    ×