search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து இங்கிலாந்தின் வேய்ன் ரூனே ஓய்வு
    X

    சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து இங்கிலாந்தின் வேய்ன் ரூனே ஓய்வு

    இங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்து வீரரான வேய்ன் ரூனே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    லண்டன்:

    சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்பவர், வேய்ன் ரூனே. இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். 31 வயதான ரூனே உள்ளூர் போட்டிகளில் எவர்டன் அணிக்காக கடந்த 2002 - 2004ல் விளையாடினார். பின்னர் பார்சிலோனா அணிக்காக 2004 - 2017ம் ஆண்டுவரை விளையாடினார். பார்சிலோனா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இப்போது மீண்டும் எவர்டன் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், ரூனே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இங்கிலாந்து அணி, அடுத்த மாதம், நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் விளையாட உள்ளது. ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால் அந்த தகுதிச்சுற்று போட்டிகளில் அவர் கலந்து கொள்ளமாட்டார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவரது ஓய்வு முடிவு இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தனது ஓய்வு குறித்து ரூனே வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்து அணியில் நான் திரும்ப விளையாட வேண்டும் என இன்று, அணியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது மிகவும் சிறந்தது. எனினும் நீண்ட ஆலோசனைக்கு பின் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திட்டவட்டமாக கூறிவிட்டேன். இந்த கடின முடிவை எனது குடும்பத்தினர், எவர்டன் அணி மேலாளர் மற்றும் நெருக்கமானவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்துள்ளேன்.

    இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது எப்பொழுதும் எனக்கு சிறப்பானது. ஒவ்வொரு முறையும் அணி வீரராகவோ, அணித்தலைவராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமையாக இருந்தது. எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. ஆனால் இப்போது நான் விலக வேண்டும் என்பதை நம்புகிறேன்.

    மான்செஸ்டர் அணியைவிட்டு விலகியது கடினமாக இருந்தது. ஆனால் எனது சொந்த அணிக்காக விளையாட வேண்டும் என சரியான முடிவை எடுத்துள்ளேன். இப்போது அந்த அணியை வெற்றிபெற செய்ய இருக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளேன்.

    நான், எப்பொழுதும் இங்கிலாந்து அணியின் ரசிகனாகவே இருப்பேன். வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. தற்போது இருக்கும் விரர்கள் அணியின் வெற்றிக்காக கடினமாக உழைத்து வெற்றி பெறுவார்கள் என நான் நம்புகிறேன். ஒருநாள் அந்த கனவு உண்மையாகும், அதுவரை நான் ஒரு ரசிகனாக காத்திருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதுவரை, 119 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ரூனே, 53 கோல்கள் அடித்துள்ளார். மான்செஸ்டர் அணிக்காக 2004 - 2017ம் ஆண்டுவரை 183 கோல்கள் அடித்துள்ளார். 

    Next Story
    ×