search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய் பிரணீத் வெற்றி; இரட்டையர் பிரிவில் ஏமாற்றம்
    X

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய் பிரணீத் வெற்றி; இரட்டையர் பிரிவில் ஏமாற்றம்

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சுமீத் ரெட்டி - அஸ்வினி பொன்னப்பா ஜோடி சீன ஜோடியிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
    23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய ஜோடியான சுமீத் ரெட்டி - அஸ்வினி பொன்னப்பா ஜோடி சீனாவின் யில்யு வாங் - டோங்பிங் ஹுயாங் ஜோடியை எதிர்கொண்டது.

    முதல் செட்டை 17-21 என இழந்த இந்திய ஜோடி, 2-வது செட்டை 21-18 எனக் கைப்பற்றியது. ஆனால் 3-வது செட்டை சீன ஜோடி 21-5 என எளிதில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் இந்திய ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.



    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சாய் பிரணீத் வெய் நான்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய் பிரணீத் 21-18, 21-17 வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    Next Story
    ×