search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஜூட் பெலிக்ஸ் நியமனம்
    X

    ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஜூட் பெலிக்ஸ் நியமனம்

    இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ஜூட் பெலிக்ஸ் செபஸ்டியான் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய ஹாக்கி அணி சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த அணியில் ஜூனியர் ஹாக்கி அணியில் இருந்து வந்த 9 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.

    ஜூனியர் ஹாக்கி அணியை வலுப்படுத்தி அதில் இருந்து தேசிய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் வகையில், ஜூனியர் அணியை வலுப்படுத்துவதற்காக முன்னாள் இந்திய அணி கேப்டன் ஜூட் பெலிக் செபஸ்டியான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    உலக சாம்பியன்ஷிப் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் 33 பேர் கொண்ட ஜூனியர் அணிக்கு ஜூட் பெலிக்ஸ் பயிற்சி அளிக்க உள்ளார்.

    1993 முதல் 1995-ம் ஆண்டு வரை இந்திய தேசிய அணிக்கு கேப்டனாக ஜூட் பெலிக்ஸ் இருந்துள்ளார். 1995-ம் ஆண்டு மத்திய அரசு பெலிக்ஸ்க்கு அர்ஜூனா விருது வழங்கியது. 1993-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கும், 1994-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் கேப்டனாக பணியாற்றியுள்ளார்.

    இந்திய அணிக்காக 250 சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடிள்ளார். இந்திய அணி சார்பில் 1988, 1992 ஒலிம்பிக் தொடர், 1990, 1994 உலகக்கோப்பை தொடர் உள்ளிட்ட முக்கிய தொடர்களில் பங்கேற்றுள்ளார்.
    Next Story
    ×