search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட்டுகளை வைத்து இருந்தது வெற்றிக்கு உதவியது: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் சதீஷ் பேட்டி
    X

    விக்கெட்டுகளை வைத்து இருந்தது வெற்றிக்கு உதவியது: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் சதீஷ் பேட்டி

    விக்கெட்டுகளை கைவசம் வைத்து இருந்ததே வெற்றிக்கு உதவியாக இருந்தது என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் சதீஷ் கூறியுள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ஆர்.சதீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி: நீங்கள் திட்ட மிட்டு போட்டியை அனுகினீர்களா?

    பதில்: வசந்த் சரவணனும், நானும் 25 ஆண்டுகளாக ஒன்றாக விளையாடுகிறோம். இதனால் யார் பந்து வீசப்போடுகிறார்? யாரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். நாங்கள் திட்டமிட்டு செயல்பட்டோம். இதனால் விக்கெட்டுகள் எங்கள் கைவசம் இருந்தது.

    கே: மிகவும் மெதுவாக ஆட்டத்தை தொடங்கினீர்கள், சேஸிங் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருந்தீர்களா?

    ப: தூத்துக்குடி அணிக்கு எதிரான 4 ஆட்டங்களிலும் நாங்கள் மிக விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்து இருக்கிறோம். நாங்கள் விக்கெட்டுகளை இழந்தால், உத்வேகத்தை இழந்துவிடுவோம். ஆதலால், விக்கெட்டுகள் எங்கள் கைவசம் இருக்க வேண்டும் என நினைத்தோம். ஒரு ஓவர் மீதம் இருக்கும் முன்பே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். தூத்துக்குடி அணி வீரர்கள் 2 ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசியபோதிலும் நாங்கள் பதற்றம் இல்லாமல் பேட்செய்தோம்.

    கே: 5 ஓவர்களில் 15 ரன்கள் தான் அடித்தீர்கள்?

    ப: மெதுவாகத்தான் பேட் செய்தோம், 2 பவுண்டரிகள்அடித்தால், ஆட்டம் கட்டுக்குள் வந்துவிடும் என நினைத்தோம். ஓவருக்கு 11 ரன்கள் வரை எடுக்கவில்லை. ஓவருக்கு 7 ரன்கள் எடுத்தால் போதும் என நினைத்து பேட் செய்தோம். எதிரணியினர் விக்கெட் வீழ்த்த முயன்றும் முடியவில்லை. இதனால், மனரீதியாக அவர்கள் சோர்வடைந்து விட்டனர். விக்கெட்டுகளை கைவசம் வைத்து இருந்ததே வெற்றிக்கு உதவியாக இருந்தது.

    கே: உங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தியது எது?

    ப: விக்கெட் விழாமல் களத்தில் நிலைத்து ஆடினால், எந்தபோட்டியிலும் வெல்லலாம் என்ற நம்பிக்கை இருந்தது. வேண்டும் என்ற சிந்தனையுடன் பேட் செய்தேன். ஒற்றுமையாக செயல்பட்டதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு இதைவிட சிறப்பாக செயல்படுவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×