search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    71 பந்துகளில் சதம்: தவானுக்கு வீராட் கோலி பாராட்டு
    X

    71 பந்துகளில் சதம்: தவானுக்கு வீராட் கோலி பாராட்டு

    71 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த தவானுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
    தமுல்லா:

    இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தமுல்லாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை 43.2 ஓவரில் 216 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் டிக்வெலா அதிகபட்சமாக 74 பந்தில் 64 ரன் (8 பவுண்டரி) எடுத்தார். அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டும், பும்ரா, யசுவேந்தரா சஹால், கேதர் ஜாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்தியா 28.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் தவான் 90 பந்தில் 132 ரன்னும் (20 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் வீராட் கோலி 70 பந்தில் 82 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    தவான் 71 பந்தில் சதம் அடித்து அதிரடி முத்திரை பதித்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிவேக சதம் இதுவாகும்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 3 மாதமாக தவான் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வருகிறார். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கடைசி வரை களத்தில் நிற்பது முக்கியமானது. அந்த பணியை தான் தவான் செய்தார்.



    ஆல்ரவுண்டர் என்ற முறையில் அக்‌ஷர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.அவரது பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது.

    2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணியில் ஏராளமான மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்னும் 24 மாதங்கள் இருந்தாலும் முன்னதாக அணியை தயார்படுத்த திட்டமிட்டு உள்ளோம். சோதனை முறையில் மாற்றங்களை செய்து பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×