search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று சாதனை படைத்த இந்திய கால்பந்து அணி
    X

    தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று சாதனை படைத்த இந்திய கால்பந்து அணி

    சர்வதேச கால்பந்து போட்டிகளில் கடைசியாக விளையாடிய எட்டு ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய கால்பந்து அணி, மொரிசியஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. 19-ம் தேதி மொரிசியஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. 

    இப்போட்டியில் வென்றதன் மூலம் கடைசியாக விளையாடிய எட்டு சர்வதேச போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 1962 முதல் 1964-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் வென்றதே முந்தைய சாதனையாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் 53 ஆண்டுகால சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.

    இந்த சாதனை குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் கூறியதாவது:-

    "இந்தாண்டின் ஏ.எஃப்.சி. ஆசிய கோப்பைக்கு தகுதி பெறாவிட்டால் இந்த தொடர் வெற்றி பயனற்று போகும். அதுவே என் இலக்கு. நான் வரலாற்றை பார்ப்பவன் இல்லை" என கூறினார். 

    முத்தரப்பு தொடரில் இந்திய அணி அடுத்த போட்டியில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணியை 24-ம் தேதி எதிர்கொள்கிறது.
    Next Story
    ×