search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி ஓபன்: ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் டிமித்ரோ
    X

    சின்சினாட்டி ஓபன்: ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் டிமித்ரோ

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நிக் கிரைகோஸை வீழ்த்தி பல்கேரியாவின் டிமித்ரோ சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    நியூயார்க்:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. நேற்று இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஏழாம்நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகார் டிமித்ரோவும் 23-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் நிக் கிரைகோஸும் மோதினர். 

    இப்போட்டியில் திமித்ரோ 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திமித்ரோவிற்கு 9.54 லட்சம் அமேரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இரண்டாம்நிலை வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹலிப்பும் நான்காம்நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருஷாவும் பலப்பரிட்சை செய்தனர். இப்போட்டியில் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் முகுருஷா வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இப்போட்டியில் வெற்றி பெற்ற ஹலிப்பிற்கு 5.22 லட்சம் அமேரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


    ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஐந்தாம் நிலையில் இருக்கும் பிரான்சின் நிகோலஸ் மகுட் - ஹெர்பர்ட் ஜோடி, மூன்றாம் நிலையில் இருக்கும் பிரட்டனின் ஜமி முர்ரே - பிரேசிலின் புருனோ சோர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 7-6, 6-4 என்ற நேர் செட்களில் மகுட் - ஹெர்பர்ட் ஜோடி வென்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற ஜோடிக்கு 2.95 லட்சம் அமேரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


    பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் சூ-வேய் - ரோமானியாவின் மோனிகா நிகுல்ஸ்கு ஜோடி, இரண்டாம் நிலையில் இருக்கும் சுவிஸர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் - தாய்வானின் சான் யங்-ஜன் ஜோடியுடன் விளையாடியது. இதில் ஹிங்கிஸ் - சான் யங்-ஜன் ஜோடி 4-6, 6-4, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற ஜோடிக்கு 1.49 லட்சம் அமேரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    Next Story
    ×