search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் லோதா பரிந்துரைகளை பின்பற்றவில்லை: அசாருதீன் குற்றச்சாட்டு
    X

    ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் லோதா பரிந்துரைகளை பின்பற்றவில்லை: அசாருதீன் குற்றச்சாட்டு

    ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் லோதா பரிந்துரைகளை பின்பற்றவில்லை என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன் குற்றம்சாட்டியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் விளைாடிய காலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ இவருக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து அசாருதீன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையில் சூதாட்டத்தில் அசாருதீனுக்கு தொடர்பில்லை என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

    இருந்தாலும் பிசிசிஐ அசாருதீனை விலக்கி வைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தலைவர் தேர்தல் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதை அச்சங்கம் நிராகரித்தது.

    இந்நிலையில் ‘‘மொயின்-உத்-தவ்லா கிரிக்கெட் தொடருக்கான ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகளிலும் உள்ள வீரர்கள் இரண்டு நாட்கள் லீக்கில் மூன்று சதங்களுக்கு மேல் அடித்துள்ளனர்.



    ஐந்து விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது. தகுதியான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

    லோதா கமிட்டி பரிந்துரையின்படி தேர்வாளர்கள் குறைந்தது 25 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். தேர்வாளர்களை நியமிக்கும்போது இந்த விதிமுறை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி லேதா கமிட்டி பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்பதை வெளிக்காட்டுவதற்குதான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு. இதை மீடியாக்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
    Next Story
    ×