search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேசத்தை எளிதாக எடபோடவில்லை: ஆஸி. கேப்டன் ஸ்மித் சொல்கிறார்
    X

    வங்காள தேசத்தை எளிதாக எடபோடவில்லை: ஆஸி. கேப்டன் ஸ்மித் சொல்கிறார்

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காள தேசத்தை எளிதாக எடபோடவில்லை என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா அணி வங்காள தேசத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணி ஆசிய கண்டத்தில் சிறப்பாக விளையாடியது கிடையாது.

    கடந்த 10 ஆண்டுகளில் 22 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்திருந்தது. இந்த தொடரின்போது இந்தியாவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இந்த நம்பிக்கையுடன் வங்காள தேசம் சென்றுள்ளது ஆஸ்திரேலியா. அதேவேளையில் வங்காள தேசம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்தது. இதனால் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாரகியுள்ளது.

    இந்த இரண்டு போட்டிகளும் ஆசிய கண்டத்தில் எங்களது சாதனையை உயர்த்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘வங்காள தேசதிற்கு எதிரான தொடர் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன். சொந்த மண்ணில் வங்காள தேசம் சிறப்பாக விளையாடும் அணி. எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லமாட்டேன்.



    எங்களுடைய திறமை மீது நாங்கள் உறுதியாக இருக்கும். திறமையை சரியான வழியில் வெளிப்படுத்தி இந்த தொடரை சிறப்பானதாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆசிய கண்டத்தில் சிறப்பாக விளையாட நாங்கள் விரும்புகிறோம். தற்போது எங்களுடைய மோசமான சாதனையை மாற்றுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

    இந்திய தொடரின்போது சில விஷயங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். அதை தொடர்ச்சியாக நீண்ட காலம் கொண்டு செல்வது அவசியம். எங்களுடைய திறமையை வெளிப்படுத்த மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய தொடரில் என்ன கற்றுக் கொண்டோமோ, அதை இந்த தொடரில் செயல்படுத்தி முன்னிலை வகிப்போம் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×