search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருசில நாட்களில் உலக லெவன் அணி அறிவிக்கப்படும்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
    X

    ஒருசில நாட்களில் உலக லெவன் அணி அறிவிக்கப்படும்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

    ஒருசில நாட்களில் உலக லெவன் அணி அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கை வீரர்கள் வந்த பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குல் நடத்தினார்கள். இதனால் சர்வதேச அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தனர்.

    கடைசி 9 ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணி மட்டும்தான் பாகிஸ்தான் சென்றுள்ளது. தற்போது தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை, உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குகிறோம், பாகிஸ்தான் வந்து விளையாடுங்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கேட்டும், எந்த நாடும் பாகிஸ்தான் செல்ல தயாராக இல்லை.

    இதுகுறித்து ஐ.சி.சி.யில் பலமுறை பாகிஸ்தான் முறையிட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு குறித்து ஆராய ஐசிசி குழு பாகிஸ்தான் சென்றது. இந்தக்குழு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சாதகமான தகவலை அறிவித்தது.

    சர்வதேச அணிகள் பாகிஸ்தான் வந்து விளையாடுவதற்கு முன்னோட்டமாக ஐ.சி.சி. உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்று விளையாடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்துள்ளது.

    மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் லாகூரில் செப்டம்பர் 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த தொடரில் விளையாட இருக்கும் வீரர்களுக்கு தலா 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அமெரிக்க டாலர் கொடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. உலக லெவன் அணிக்கு ஆன்டி பிளவர் பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த தொடருக்கான ஐ.சி.சி. உலக லெவன் அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து நஜம் சேதி கூறுகையில் ‘‘உலக லெவன் அணி பாகிஸ்தான் வரும் என்பதை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். ஐ.சி.சி.யில் உள்ள அனைத்து நாட்டின் வீரர்களும் உலக லெவன் அணியில் இருப்பார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும்.



    ஒருமுறை உலக லெவன் அணி பாகிஸ்தான் வந்துவிட்டால், இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் வந்து விளையாடும். இந்த வாய்ப்புகள் மற்ற அணிகள் பாகிஸ்தான் வந்து விளையாட முக்கிய காரணமாக அமையும்.

    அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் உலக லெவன் அணியை நாங்கள் அறிவிக்க இருக்கிறோம். இது மெதுவான நடைமுறையாக இருந்தாலும், தற்போது நாங்கள் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
    Next Story
    ×