search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி ஓபன்: இறுதிப்போட்டியில் முகுருஷா - ஹலிப் பலப்பரிட்சை
    X

    சின்சினாட்டி ஓபன்: இறுதிப்போட்டியில் முகுருஷா - ஹலிப் பலப்பரிட்சை

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (20-ம் தேதி) இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளது.

    நியூயார்க்:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இப்போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று (20-ம் தேதி) இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஏழாம்நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகார் திமித்ரோ தகுதிப்பெற்று உள்ளார். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 9.54 லட்சம் அமேரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இரண்டாம்நிலை வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹலிப்பும் நான்காம்நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருஷாவும் பலப்பரிட்சை செய்ய உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 5.22 லட்சம் அமேரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஐந்தாம் நிலையில் இருக்கும் பிரான்சின் நிகோலஸ் மகுட் - ஹெர்பர்ட் ஜோடி, மூன்றாம் நிலையில் இருக்கும் பிரட்டனின் ஜமி முர்ரே - பிரேசிலின் புருனோ சோர்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 2.95 லட்சம் அமேரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் சூ-வேய் - ரோமானியாவின் மோனிகா நிகுல்ஸ்கு ஜோடி, இரண்டாம் நிலையில் இருக்கும் சுவிஸர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் - தாய்வானின் சான் யங்-ஜன் ஜோடியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெல்பவர்களுக்கு 1.49 லட்சம் அமேரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும்.
    Next Story
    ×