search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார் விராட் கோலி
    X

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார் விராட் கோலி

    டெஸ்ட் தொடர்களில் தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் கேப்டன் விராட் கோலி சர்வதேசப் போட்டிகளில் அடியெடுத்து வைத்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


    புதுடெல்லி:

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேசப் போட்டிகளில் 2008 ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகமானார். 

    இதே ஆகஸ்ட் 18, 2008-ம் ஆண்டு விராட் கோலி சர்வதேசப் போட்டியில் முதன்முதலாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அந்தப் போட்டியில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன் பிறகு, நடந்தது எல்லாம் வரலாறுதான். இன்றைக்கும் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் இமாலைய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ள ஒரே வீரர் கோலி மட்டுமே என கிரிக்கெட் ஆர்வலர்களால் கூறப்படுகிறது.

    தற்போது இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி தற்போது ஒரு நாள் தொடருக்காகத் தயாராகி வருகிறது. இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (20-ம் தேதி) நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்று கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும்படியான படம் அது. அந்தப் படத்தோடு, "இதே நாளில், இதே மைதானத்தில், இதே நாற்காலியில்தான் இந்திய அணியுடனான எனது பயணம் தொடங்கியது" என்று நெகிழ்ச்சியாக நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். 


    Next Story
    ×