search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது, 5-வது இடத்திற்கு லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே இடையே கடும் போட்டி: கோலி
    X

    4-வது, 5-வது இடத்திற்கு லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே இடையே கடும் போட்டி: கோலி

    இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 4-வது மற்றும் 5-வது இடத்தில் களம் இறங்க லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ் மற்றும் மணீஷ் பாண்டே இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று கூறிய விராட் கோலி, 4-வது மற்றும் 5-வது இடத்திற்கு லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ் மற்றும் மணீஷ் பாண்டே இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இடம்பெறாததால் மிடில் ஆர்டர் வரிசையில் வெற்றிடம் உள்ளது. லோகேஷ் ராகுல் உண்மையிலேயே உறுதியான வீரர் என்று நாங்கள் உணர்கிறோம். காயம் அடைவதற்கு முன் மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துரதிருஷ்டவசமாக அவர் அணியில் இடம்பெறாததால், மணீஷ் பாண்டேக்கு வாய்ப்பு கிடைத்தது. லோகேஷ் ராகுல் உறுதியாக மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார்.



    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் எந்தவிதமான எதிர்பார்ப்புடனும், குறிப்பிட்ட விதிமுறைகளுடனும் செல்ல முடியாது. எந்தவொரு வீரரும் எங்கே வேண்டும் என்றாலும் செல்ல முடியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைதான் கவனிக்க வேண்டும். மணீஷ் பாண்டே சிறப்பாக விளையாடியதால், அவர் வாய்ப்பை பறித்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்தார். அவருடைய திறமை, சூப்பரான உடற்கட்டுப்பாடு பற்றி எங்களுக்குத் தெரியும். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

    மூன்று வீரர்கள் போட்டியில் உள்ளனர். ஒரு வீரரை உறுதியாக கூற இயலாது. இது சிறந்த போட்டி. இது ஒருவருக்கு ஒருவரை முன்னேற்றம் அடையச் செய்து இந்திய அணிக்கு பயனைத் தரும்’’ என்றார்.
    Next Story
    ×