search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்: ஒரு போட்டியில் விளையாட பத்ரிநாத்துக்கு தடை
    X

    டி.என்.பி.எல்: ஒரு போட்டியில் விளையாட பத்ரிநாத்துக்கு தடை

    எலிமினேட்டர் ஆட்டத்தில் காரைக்குடி அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியதால் அணி கேப்டன் பத்ரிநாத்துக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


    சென்னை:

    எலிமினேட்டர் ஆட்டத்தில் காரைக்குடி அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியதால் அணி கேப்டன் பத்ரிநாத்துக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடந்த புதன்கிழமை நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் காரைக்குடி அணி பந்து வீச நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இந்த தவறை காரைக்குடி அணி இந்த சீசனில் 3-வது முறையாக செய்தது. 

    இதைத்தொடர்ந்து, காரைக்குடி அணி கேப்டன் பத்ரிநாத்துக்கு போட்டி கட்டணம் முழுமையாக அபராதமாக விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதித்து போட்டி அமைப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சீசனில் காரைக்குடி அணிக்கு மேற்கொண்டு போட்டிகள் எதுவும் இல்லாததால் பத்ரிநாத் மீதான தடை அடுத்த சீசனில் செயல்படுத்தப்படும். 

    இதற்கு முன்னதாக கடந்த ஜூலை 23-ம் தேதி காரைக்குடி விளையாடிய போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாததால் பத்ரிநாத்துக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற போட்டியிலும் அதே தவறை செய்ததற்காக அவருக்கு 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×