search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்கள் ஆக்கி - இந்திய அணியிடம் ஆஸ்திரியா தோல்வி
    X

    ஆண்கள் ஆக்கி - இந்திய அணியிடம் ஆஸ்திரியா தோல்வி

    இந்தியா-ஆஸ்திரியா அணிகளுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    ஆம்ஸ்டெல்வீன்:

    இந்திய ஆண்கள் ஆக்கி அணி, ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டி தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரியா அணிகள் மோதிய ஆட்டம் ஆம்ஸ்டெல்வீனில் நேற்று முன்தினம் நடந்தது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரமன்தீப்சிங் 25-வது நிமிடத்திலும், 32-வது நிமிடத்திலும், ஷிங்லென்சனா 37-வது நிமிடத்திலும், 60-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆஸ்திரியா அணி தரப்பில் ஆலிவர் பின்டெர் 14-வது நிமிடத்திலும், மைக்கேல் கோர்பெர் 53-வது நிமிடத்திலும், பாட்ரிக் 55-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 
    Next Story
    ×