search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பர்மிங்காம் பகலிரவு டெஸ்ட்: அலைஸ்டர் குக், ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து 348 ரன்கள் குவிப்பு
    X

    பர்மிங்காம் பகலிரவு டெஸ்ட்: அலைஸ்டர் குக், ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து 348 ரன்கள் குவிப்பு

    இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்துள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்துள்ளது.

    ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று (17-ம் தேதி) தொடங்கியது. இது பகலிரவு டெஸ்ட் என்பது கவனத்துக்குரிய அம்சமாகும். மின்னொளியில் நடக்க இருப்பதால் பிரத்யேக இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட்டது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக்கும் மார்க் ஸ்டோமேனும் களமிறங்கினர். ஸ்டோமேன் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேமார் ரோச்சின் வேகத்தில் போல்டானார். 

    அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் வெஸ்ட்லியும் 8 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் எல்.பி.டபுல்யூ. ஆனார். அதன்பின் குக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரூட் பொருப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். சிறப்பாக விளையாடிய ரூட் முதலில் சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 13-வது சதமாகும். அவரைத் தொடர்ந்து குக்கும் டெஸ்ட் போட்டிகளில் தனது 31-வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

    ரூட் 136 ரன்கள் எடுத்து ரோச் பந்தில் போல்ட் ஆனார். அலைஸ்டர் குக் - ஜோ ரூட் ஜோடி மூன்றாவது விக்கெட்டிற்கு 248 ரன்கள் குவித்தது. அடுத்து டேவிட் மலன் குக்குடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் இறங்கினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. குக் 153 ரன்களுடனும், மலன் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×