search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 டெஸ்டிலும் இந்தியாவிடம் தோல்வி: அறிக்கை தாக்கல் செய்ய இலங்கை விளையாட்டு மந்திரி உத்தரவு
    X

    3 டெஸ்டிலும் இந்தியாவிடம் தோல்வி: அறிக்கை தாக்கல் செய்ய இலங்கை விளையாட்டு மந்திரி உத்தரவு

    இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவிடம் மோசமான தோல்வி அடைந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி விளையாட்டுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி இலங்கை அணியை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.

    முதல் டெஸ்டில் 304 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன் வித்தியாசத்திலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஒயிட் வாஷ் ஆனது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை முன்னாள் கேப்டன் ரணதுங்கா கடுமையாக சாடியிருந்தார்.

    இந்நிலையில், இலங்கை அணியின் மோசமான தோல்விக்கான காரணம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விளையாட்டுத்துறை மந்திரி ஜெயசேகரா உத்தரவிட்டுள்ளார்.

    ‘தேர்வுக்குழுவை உடனடியாக நம்மால் மாற்ற முடியாது, அடுத்த தேர்தலின்போதுதான் அதை செய்ய முடியும். 8 ஆண்டுகளாக இடைக்கால கமிட்டி நிர்வாகம் செய்தபோது யாரும் புகார் கூறவில்லை. தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த ஒரே அரசு இந்த அரசுதான். எனவே, கிரிக்கெட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது தொடர்பாக வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளேன்’ என்றார் ஜெயசேகரா.
    Next Story
    ×