search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து: ஒரே ஒவரில் 40 ரன்கள் குவித்த 54 வயதான கிரிக்கெட் வீரர்
    X

    இங்கிலாந்து: ஒரே ஒவரில் 40 ரன்கள் குவித்த 54 வயதான கிரிக்கெட் வீரர்

    இங்கிலாந்தில் நடைபெற்ற நான்காம் தர உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் 54 வயதான மெக்கோம்ப் என்பவர் கடைசி ஓவரில் 40 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்துள்ளார்.


    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெற்ற நான்காம் தர உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் 54 வயதான மெக்கோம்ப் என்பவர் கடைசி ஓவரில் 40 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

    இங்கிலாந்தின் நான்காம் தர உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஸ்வின்ப்ரூக் அணியும் டோர்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஸ்வின்ப்ரூக் அணி நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய டோர்செஸ்டர் அணி 44 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை மிஹாய் கியூகஸ் வீச, அதை 54 வயதான ஸ்டீவ் மெக்கோம்ப் எதிர்கொண்டார்.

    கடந்த 20 வருடங்களாக டோர்செஸ்டர் அணிக்காக விளையாடி வரும் ஸ்டீவ், நோபாலாக வீசப்பட்ட முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அதற்கு பதிலாக மீண்டும் வீசப்பட்ட பந்தையும் அவர் சிக்ஸர் விளாச, முதல் பந்தில் மொத்தம் 13 ரன்கள் கிடைத்தது. இரண்டாவது பந்தை கியூகஸ் யார்க்கராக வீசயதால் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. 

    மூன்றாவது பந்து மற்றும் நோ-பாலாக வீசப்பட்ட நான்காவது பந்து ஆகிய இரண்டு பந்துகளிலும் மெக்கோம்ப், பவுண்டரிகள் விளாசினார். அடுத்த இரண்டு பந்துகளிலும் மெக்கோம்ப் சிக்ஸர்கள் விளாச, இரு அணிகளின் ஸ்கோர் சமநிலையானது. 

    இதையடுத்து, கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய சூழலில் அந்த பந்திலும் சிக்ஸர் விளாசி டோர்செஸ்டர் அணியை மெக்கோம்ப் வெற்றிபெறச் செய்தார். 

    இந்த வெற்றி குறித்து பேசிய மெக்கோம்ப், காலில் ஏற்பட்ட காயத்தால் ரன்களை ஓடி எடுக்க சிரமாக இருந்ததால் பவுண்டரிகள் மூலம் ரன் குவிக்க திட்டமிட்டதாகக் கூறினார்.
    Next Story
    ×