search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ், கெர்பர் இரண்டாம் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
    X

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ், கெர்பர் இரண்டாம் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கெர்பர் ஆகியோர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர்.


    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கெர்பர் ஆகியோர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர்.

    அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை (16-ம் தேதி) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் வீனஸ் வில்லியம்ஸும், 48-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் அஷ்லெக் பார்ட்டியும் மோதினர்.

    இப்போட்டியின் முதல் சுற்றை பார்ட்டி 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமானது. வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாம் சுற்றில் பார்ட்டி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

    அஷ்லெக் பார்ட்டி

    இதன்மூலம் பார்ட்டி இத்தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சியான முறையில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார்.

    மற்றொரு இரண்டாம் சுற்று போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலேப், அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்டை 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சிமோனா ஹலேப்

    மற்றொரு பெண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீராங்கனையான அன்ஜெலிக் கெர்பர், ரஷ்யாவின் எகர்டினா மகரோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் மகரோவா 6-4, 1-6, 7-6 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். அன்ஜெலிக் கெர்பர் அதிர்ச்சியான முறையில் வெளியேறினார்.

     எகர்டினா மகரோவா

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நான்காம் நிலை வீராங்கனையான முகுருஷா, பிரேசிலின் ஹடாட் மையாவை 6-2, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    முகுருஷா

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஏழாம் நிலை வீராங்கனையான ஜோனா கோன்டா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்சை வீழ்த்தினார்.


    ஜோனா கோன்டா
    Next Story
    ×