search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் காரைக்குடி அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்
    X

    டி.என்.பி.எல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் காரைக்குடி அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்

    தமிழ்நாடு பீரிமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் காரைக்குடி காளைகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வீழ்த்தியது.
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பீரிமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் காரைக்குடி காளைகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வீழ்த்தியது.

    தமிழ்நாடு பீரிமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டி திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் லீக் ஆட்டங்களில் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்கள் பிடித்த காரைக்குடி காளைகள் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற கோவை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி காரைக்குடி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த ஆகியோர் களமிறங்கினர்.

    விஷால் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து ஸ்ரீகாந்துடன் ஆதித்யா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் அரைசதம் அடித்தார். அவர் 36 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து கண்ணன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடித்தார். 

    இதைத்தொடர்ந்து கரைக்குடி அணித்தலைவர் பத்ரிநாத் களமிறங்கினார். ஆதித்யா 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சாஜகான் - பத்ரிநாத் ஜொடி ரன்குவிப்பில் இறங்கியது. 20 ஓவர்கள் முடிந்த நிலையில் காரைக்குடி அணி மூன்று விக்கெட்களை மட்டும் இழந்து 193 ரன்கள் குவித்தது. பத்ரிநாத் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கோவை அணி பந்துவீச்சில் தரமணி கண்ணன் 2 விக்கெட்களும் பரத் அருண் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம் கோவை அணிக்கு 194 ரன்கள் என்ற கடினமான இலக்கை காரைக்குடி அணி நிர்ணயித்தது.

    தொடர்ந்து கோவை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் முரளி விஜய் - சூர்யபிரகாஷ் ஆகியோர் களமிறங்கினர். சூர்யபிரகாஷ் 1 ரன்னில் மோகன் பிரசாத் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அனிருத் சீதா ராம் 11 ரன்னில் மோகன் பிரசாத் பந்தில் சுனின் சாமிடம் கேட்சானார்.

    அதைத்தொடர்ந்து முரளி விஜயுடன் ரவிகுமார் ரோகித் ஜோடி சேர்ந்தார். அவர்கள் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். முரளி விஜய் 34 ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய ரோகித் சதம் அடித்து வெற்றியை உறுதி செய்தார். 

    கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பவுலர் இரண்டு பந்துகளை நோ-பாலாக வீசினார். ரோகித் இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அவர் 46 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் ஆடங்கும். சதம் விளாசிய ரோகித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்மூலம் கோவை அணி இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றது. வருகிற 18-ம் தேதி நெல்லையில் நடைபெறும் 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் கோவை அணி, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 20-ம் தேதி சென்னையில் நடைபெறுற உள்ள இறுதிபோட்டியில் தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×